வீட்டிலிருந்தபடியே காப்பீடு விற்பனை பகுதி நேரம்

வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்க முடியுமா?

பணம் சம்பாதிக்கவும் நல்லதொரு வாழ்க்கை வாழவும் வீட்டை விட்டு வெளியில் சென்று வேலை செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். அதனால் இல்லத்தரசிகளும் , ஓய்வு பெற்றவர்களும் வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிக்க முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். காப்பீடு துறை வீட்டிலிருந்து செய்யக்கூடிய பகுதி நேர வேலை வாய்ப்பை அளிக்கிறது. இந்த வேலை வாய்ப்புகள் வீட்டிலிருந்து வசதியான முறையில் பணம் சம்பாதிக்க உதவுகிறது. நீங்கள் மிண்ட்ப்ரோவுடன் இணைந்து விற்பனை பிரதிநிதியாக காப்பீடு துறையில் உங்கள் பகுதிநேர தொழிலை வீட்டிலிருந்து செய்யலாம்.

வீட்டிலிருந்து காப்பீடு விற்பனை செய்து எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு விற்பனை பிரதிநிதியாக உங்கள் வீட்டிலிருந்தே உங்களால் ஒரு மிகச்சிறந்த வருமானம் பெற முடியும். நீங்கள் மூன்று விதமாக வருமானம் பெறலாம்.

  • காப்புறுதி விற்பனை மூலமாக முதலாண்டு தரகு (கமிஷன்) வருமானம்
  • உங்கள் வாடிக்கையாளர்கள் நீங்கள் அவர்களிடம் விற்பனை செய்த காப்புறுதி ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படும்போது வரும் புதுப்பிப்பதற்கான தரகு ( கமிஷன் )
  • காப்பீடு நிறுவனங்கள் நடத்தும் பரிசு போட்டிகளின் மூலமாக வரும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள்

வீட்டிலிருந்து காப்பீடு விற்பனை செய்வதின் மூலம் எவ்வளவு வருமானம் பெறலாம்?

நீங்கள் பெரும் தரகு (கமிஷன்) மிகவும் கவர்ச்சிகரமானதாகும். வீட்டிலிருந்து பகுதிநேர காப்பீடு விற்பனை செய்வதின் மூலம் கீழ்கண்ட வருமானம் பெறலாம்

விற்கப்படும் காப்பீடு திட்டங்களின் வகைகள்தரகு (கமிஷன்) அமைப்பு
மோட்டார் காப்பீடு திட்டங்கள்விரிவான மகிழுந்து காப்புறுதி ஒப்பந்தங்கள்– சொந்த நஷ்ட காப்பீடு தொகையில் 19.5 % வரை
விரிவான தொழில் முறை வாகனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்கள்– சொந்த நஷ்ட காப்பீடு தொகையில் 19.5% வரை
விரிவான இரு சக்கர வாகனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்கள்– சொந்த நஷ்ட காப்பீடு தொகையில் 22.50% வரை .
தேர்ட் பார்ட்டி (மூன்றாம் நபர்) காப்புறுதி ஒப்பந்தங்கள்– காப்பீடு தொகையில் 2.50% வரை
உயிர் காப்பீடு திட்டங்கள்வழக்கமான காப்புறுதி தொகையை கொண்ட உயிர் காப்பிட்டு திட்டங்கள்– வருடாந்திர காப்பீடு தொகையில் 30% வரை
ஒற்றை முறை காப்புறுதி கட்டணம் செலுத்தும் வாய்ப்புடைய காப்புறுதி ஒப்பந்தங்கள்– வருடாந்திர காப்பீடு தொகையில் 2% வரை
டேர்ம் காப்பீடு திட்டங்கள்வழக்கமான காப்புறுதி தொகையை கொண்ட உயிர் காப்பிட்டு திட்டங்கள்– வருடாந்திர காப்பீடு தொகையில் 30% வரை
ஒற்றை முறை காப்புறுதி கட்டணம் செலுத்தும் வாய்ப்புடைய காப்புறுதி ஒப்பந்தங்கள்– வருடாந்திர காப்பீடு தொகையில் 2% வரை
உடல்நல காப்புறுதி ஒப்பந்தங்கள் :வருடாந்திர காப்பீடு தொகையில் 15% வரை .

எடுத்துக்காட்டு:

மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியாகும்போது நீங்கள் ஈட்டக்கூடிய வருமானத்தின் அளவை விளக்கும் உதாரணம்.
ஒத்துக்கொள்ளப்பட்ட விவரங்கள்:

  • நீங்கள் உங்கள் மகிழுந்து வைத்திருக்கும் நண்பரிடம் ஒரு மகிழுந்து காப்புறுதியும் , உங்கள் உறவினர் வைத்திருக்கும் இரு சக்கர வாகனத்திற்கான காப்புறுதியும் விற்பனை செய்கிறீர்கள்.
  • உயிர் காப்பீட்டின் அவசியத்தை உங்கள் நெருங்கிய நண்பரிடம் விளக்கி சொல்லி அதன் பின் அவரிடம் டேர்ம் காப்பீடை விற்பனை செய்கிறீர்கள்.
  • தனக்கும் தன் குடும்பத்திற்குமான உடல்நல காப்பீடு தேவைப்பட்ட உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு குடும்ப உடல்நல காப்பீடு திட்டத்தை விற்கிறீர்கள்.

மேற்கூறிய நான்கு காப்பீட்டை மட்டும் விற்பனை செய்வதால் நீங்கள் பெறக்கூடிய வருமானம் இதோ

விற்கப்பட்ட காப்பீட்டின் வகைகாப்புறுதி கட்டணம் (ஒத்துக்கொள்ளப்பட்டது)பொருத்தமான தரகு (கமிஷன்) சதவிகிதம்ஈட்டிய தரகு (கமிஷன்)
மகிழுந்து காப்புறுதி ஒப்பந்தங்கள்INR 15,00018%INR 2700
இரு சக்கர வாகனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்கள்INR 250020%INR 500
தேர்ட் பார்ட்டி காப்புறுதி ஒப்பந்தங்கள்INR 12,00030%INR 3600
உடல்நல காப்புறுதி ஒப்பந்தங்கள்INR 10,00012%INR 1200

நான்கு திட்டங்களின் விற்பனை மூலம் உங்களால் Rs 8000 வருமானம் பெற முடிந்தது. நீங்கள் உங்கள் விற்பனையை அதிகரித்து மற்றும் அதிக காப்புறுதி கட்டணம் பெற்றீர்களானால் உங்களால் எவ்வளவு வருமானம் பெற முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

விற்பனை பிரதிநிதி என்பவர் யார்?

விற்பனை பிரதிநிதி என்பவர் பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை விற்பனைக்கு வைத்திருக்கும் ஒரு காப்பீடு முகவர் ஆவார். காப்பீடு நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான ஒரு இடையீட்டாளர் ஆவார். ஒரு விற்பனை பிரதிநிதி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உயிர் மற்றும் பொது காப்பீடு திட்டங்களை விற்க முடியும். ஒவ்வொரு விற்கப்படும் காப்பீடு திட்டத்தின் காப்புறுதி கட்டணத்தில் ஒரு சதவிகிதம் தரகு (கமிஷன்) வருமானம் வருகிறது. வீட்டிலிருந்து சௌகரியமான முறையில் வேலை செய்து வருமானம் பெற விற்பனை பிரதிநிதியாவது ஒரு மிக சிறந்த வழியாகும்.

எவ்வாறு ஒரு விற்பனை பிரதிநிதியாவது?

விற்பனை பிரதிநிதியாவது மிகவும் சுலபமான ஒன்று. நீங்கள்:-

  • விற்பனை பிரதிநிதி உரிமம் வேண்டி மிண்ட்ப்ரோவில் பதிவு செய்ய வேண்டும்
  • உங்களுடைய KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
  • 15 மணிநேர ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய காணொளி தொகுப்பின் மூலமாக நடத்தப்படுகிறது .
  • விற்பனை பிரதிநிதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்ச்சி பெற்ற பின் விற்பனை பிரதிநிதி உரிமம் மிண்ட்ப்ரோவால் வழங்கப்படும். இந்த உரிமம் உங்களை பல்வேறு காப்பீடு நிறுவங்களின் காப்பீட்டு திட்டங்களை வீட்டிலிருந்தபடியே பகுதி நேர வேலையாக செய்ய அனுமதிக்கிறது. இப்போது உங்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருமான பெறுவது எப்படி என்பது தெரியும்.

விற்பனை பிரதிநிதி PoSP (Point of Sale Person) ஆவதன் மற்றும் வீட்டிலிருந்தபடி பணம் சம்பாதிப்பதின் பலன்கள்:

இதோ உங்களுக்கான நன்மைகள்

  • அலுவலகம் செல்லும் அவஸ்தை இல்லை:

நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்டலாம். அலுவலகம் சென்று நீண்ட நேரம் வேலை செய்ய தேவை இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வேலை செய்தால் போதும். ஆன்லைனில் பாலிசி விற்பதால் விண்ணப்ப படிவத்தையோ மற்றும் பிரீமியம் தொகையை கொடுக்கவோ இன்சூரன்ஸ் அலுவலகம் செல்ல தேவை இல்லை.

  • குறைந்தபட்ச தகுதி தேவைகள்:

விற்பனை பிரதிநிதி உரிமம் பெற நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதுமானது. வேறு எந்த தகுதியும் தேவை இல்லை. நீங்கள் ஒரு இல்லத்தரசியோ, ஓய்வு பெற்ற நபரோ, அல்லது மாணவரோ நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடி கைநிறைய சம்பாதிக்க தகுதி உடையவர் ஆகிறீர்கள்.

  • பொருளாதார சுதந்திரம்:

உங்களால் வீட்டில் இருந்தபடியே பகுதி நேர வருமானம் பெற முடிகிறது. இதனால் உங்களுக்கு பொருளாதார சுதந்திரம் பெற முடிகிறது. உங்கள் குடுமபத்தின் பண தேவைகளுக்கு உதவி அதன் மூலம் சாதித்த மன நிறைவு பெறுகிறீர்கள்.

மிண்ட்ப்ரோவின் பங்களிப்பு என்ன?

Turtlemint “s டிஜிட்டல் பார்ட்னர் ப்ரோக்ராம்மின் ஒரு பகுதியே மிண்ட்பரோ செயலி ஆகும். முதலீடின்றி காப்பீடு துறையில் தொழில் செய்து வீட்டிலிருந்தபடியே வருமானம் பெற விருப்பமுள்ளவர்களுக்கான ஒரு செயலியாகும். காப்பீடு துறையில் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி முகவர்களுக்கு தேவையான பிற்கட்ட நடைமுறைகளுக்கு உதவி செய்து முகவர்களை வாழ்வை எளிதாக்குதலே இந்த செயலியின் நோக்கமாகும். மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியாக விழைவோர் இந்த செயலியை உபயோகப்படுத்தி நேரத்தை மிச்சம் செய்யலாம். விற்பனை பிரதிநிதி என்பவர் பல்வேறு காப்பீடு நிறுவனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்களை ஒரு உரிமம் மூலம் விற்பனை செய்யும் ஒரு முகவர் ஆவார். நீங்கள் இதை சுலபமாக தரவிறக்கம் செயது கொள்ள முடியும். மிண்ட்ப்ரோவுடன் பதிவு செய்து நீங்கள் ஆன்லைன் மூலம் காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய முடியும்.

எதற்காக மிண்ட்ப்ரோவை தேர்வு செய்ய வேண்டும்?

பின்வரும் காரணங்களால், வீட்டிலிருந்து வேலை செய்யும் விற்பனை பிரதிநிதி தொழிலை தேர்ந்தெடுக்க மிண்ட்ப்ரோ ஒரு மிக சிறந்த தேர்வாகும்.

  • உங்கள் வாடிக்கையாளர்கள் காப்பீடு வாங்கும்போதும் மற்றும் விற்பனைக்கு பின்னான சேவைகளுக்கும் மேலும் உரிமை கோரும்போதும் மிண்ட்ப்ரோ உங்களுக்கு ஒரு முழுமையான ஆன்லைன் உதவி அளிக்கிறது.
  • நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதியாக உங்கள் தரகு (கமிஷன்) பற்றிய விவரங்களை மிண்ட்ப்ரோ செயலியை கொண்டு அறியலாம்.
  • உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு புதுப்பித்தல் விவரங்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு தெரிவிக்க முடியும்.
  • உங்களால் பல்வேறு காப்பீடு நிறுவனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய முடியும்.

நீங்கள் வீட்டில் இருந்தாலும் பணம் சம்பாதிக்க முடியும். மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியாகி காப்பீடு துறையில் உங்கள் தொழிலை அமைத்து கொள்ளுங்கள்.

காப்பீடு முகவர் ஆவது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள்

Hear From Our Advisors

Become an insurance advisor