உங்கள் ஓய்வுகால கனவுகளை நிறைவேற்ற மிண்ட்ப்ரோவுடன் இணைந்து காப்பீடுகள் விற்று வருமானம் பெறுங்கள்.

பணி ஓய்வு குழப்பங்கள்

ஓய்வு பெற்ற பின்பு வருமானத்திற்கு வழி இல்லாததால் வாழ்க்கை கடினமாகும் என்று பலர் நம்புகின்றனர். ஓய்வு பெற்ற பின் வேலையுடன் சேர்த்து மாத வருமானத்திற்கும் விடை தருகின்றனர். ஆனால் செலவினங்கள் குறையாததால் பொருளாதார நெருக்கடி உருவாகிறது. பணிக்காலத்தில் நிறைவேறாத கனவுகள் ஓய்வு காலத்தில் கனவாகவே ஆகிவிடுகின்றன. அவர்களின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்களிடம் போதுமான பணம் இருப்பதில்லை. இதை நிறைவேற்றிக்கொள்ள அவர்களிடம் போதுமான பணம் இருந்துவிட்டால்?

காப்பீடு விற்பனையில் ஒரு தொழிலை உருவாக்கி கொண்டுவிட்டால் அவர்களும் வருமானம் ஈட்ட முடியும். ஓய்வு பெற்றவர்கள் முதலீடு ஏதும் இல்லாமல் மிண்ட்ப்ரோவுடன் இணைந்து விற்பனை பிரதிநிதியாகி காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும்.

விற்பனை பிரதிநிதி Point of Sale Person ( POSP ) என்றால் என்ன?

காப்பீடு திட்டங்களை விற்கும் உரிமம் பெற்ற ஒரு தனி நபர் Point of Sale Person ( POSP ) ஆவார். ஒரு விற்பனை பிரதிநிதி உரிமம் மூலம் உயிர் மற்றும் பொது காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்ய முடியும். விற்பனை பிரதிநிதி காப்புறுதி திட்டங்கள் விற்பனை செய்வதன் மூலம் தரகு வருமானம் ஈட்டும் ஒரு காப்பீடு இடையீட்டாளர் ஆவார்

ஏன் விற்பனை பிரதிநிதி Point of Sale Person (POSP) ஆக வேண்டும் ?

விற்பனை பிரதிநிதி Point of Sale Person ( POSP) ஆவது உங்களுக்கு கீழ்கண்ட வழிகளில் நன்மை பயக்கும்.

  • விற்பனை பிரதிநிதியாக வயது வரம்பு இல்லை . நீங்கள் ஓய்வு பெற்ற பின்னும் மேலும் வேலை இல்லாத போதும் உங்களால் விற்பனை பிரதிநிதி ஆக முடியும்.
  • உங்களுடைய சுதந்திரமான நேரங்களில் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும்.
  • காப்பீட்டின் முக்கியத்துவத்தை பற்றியும் எதனால் காப்புறுதி ஒப்பந்தங்களை வாங்க வேண்டும் என்பதையும் உங்கள் நண்பரகள் மற்றும் குடும்பத்தாருக்கு நீங்கள் கற்பிக்க முடியும். ஆகவே காப்பீடு விற்பனை ஒரு தார்மீக தொழிலாகவும் ஆகிறது.
  • நீங்கள் காப்பீடு விற்பனை செய்து தரகு வருமானம் ஈட்டும்போது உங்களால் சுய மரியாதையுடன் தன்னிச்சையாக செயல்பட முடிகிறது
  • உங்கள் ஓய்வு காலங்களில் உங்களுக்கான ஒரு வருமானத்தை ஈட்டி செலவுகளை பற்றிய கவலை இல்லாமல் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
  • நீங்கள் உயிர் காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்யும்போது வாடிக்கையாளர் காப்பீடு தொகை செலுத்தி ஆண்டு தோறும் புதுப்பிக்கும்போது உங்களுக்கும் தரகு வருமானம் கிடைக்கும். நீங்கள் அதிகமாக காப்பீடு திட்டங்களை விற்கும்போது உங்களுக்கான ஆண்டு வருமானமாக இது மாறுகிறது.

விற்பனை பிரதிநிதியாவது Point of Sale Person (POSP) ஆவது எவ்வாறு ?

மிண்ட்ப்ரோவுடன் இணைந்து விற்பனை பிரதிநிதியாவது மிகவும் எளிதானது . பின்வரும் முறைகளை பின்பற்றவும் .

  • மிண்ட்ப்ரோவுடன் பதிவு செய்ய வேண்டும். இது ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஒரு இலவச சேவையாகும் .
  • பதிவு செய்த பின்னர் ஆன்லைன் பாடங்கள் உள்ளன. புரிந்து கொள்ள எளிதான இந்த பாடங்களை தாங்களாகவே கற்கலாம்.
  • பயிற்சி முடிந்த பின்னர் எளிமையான ஒரு ஆன்லைன் தேர்வு எழுத வேண்டும்.
  • இந்த தேர்வில் வெற்றி பெற்று விற்பனை பிரதிநிதி (Point of Sale Person) உரிமம் பெற முடியும். அவர்களால் மிண்ட்ப்ரோவுடன் இணைந்து காப்பீடு திட்டங்களை விற்பனை முடியும்.

எளிதாக விற்பனை பிரதிநிதி ஆவது எவ்வாறு என்பதை விளக்கும் இந்த காணொளி – you tube இணைப்பு

ஓய்வு பெற்றவர்களின் வருமானத்திற்கான ஆற்றல் மூலம்

மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியாக உங்களால் பல்வேறு காப்பீடு நிறுவனங்களின் உயிர் மற்றும் பொது காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய முடியும். ஒவ்வொரு காப்பீடு விற்பனை செய்யும்போதும் காப்புறுதி தொகையின் அளவை பொறுத்து கவர்ச்சிகரமான தரகு ஈட்ட முடியும். காப்புறுதி ஒப்பந்தங்கள் விற்பனை செய்ய எந்த உச்ச வரம்பும் இல்லாததால் விற்பனை பிரதிநிதியின் வருமானத்திற்கும் வரம்பு இல்லை.

நீங்கள் விற்கும் காப்பீடு மூலம் உங்களால் எவ்வளவு தரகு ஈட்ட முடியும் என்பதை விரைந்து பார்ப்போம்.

  • விரிவான மகிழுந்து காப்புறுதி ஒப்பந்தங்கள்: சொந்த நஷ்ட காப்பீடு தொகையில் 19 . 5 % வரை.
  • விரிவான தொழில் முறை வாகனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்கள்: சொந்த நஷ்ட காப்பீடு தொகையில் 19.5 % வரை.
  • விரிவான இரு சக்கர வாகனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்கள்: சொந்த நஷ்ட காப்பீடு தொகையில் 22.50% வரை.
  • தேர்ட் பார்ட்டி (மூன்றாம் நபர்) காப்புறுதி ஒப்பந்தங்கள்: காப்பீடு தொகையில் 2.50% வரை.
  • வழக்கமான காப்புறுதி தொகையை கொண்ட உயிர் காப்பிட்டு திட்டங்கள் மற்றும் டேர்ம் காப்பீடு திட்டங்கள் – வருடாந்திர காப்பீடு தொகையில் 30% வரை .
  • உடல்நல காப்புறுதி ஒப்பந்தங்கள்: வருடாந்திர காப்பீடு தொகையில் 15% வரை .

நீங்கள் விற்கும் காப்பீடு திட்டத்தை பொறுத்து பணம் சம்பாதிக்க முடியும். நீங்கள் Rs.10000க்கு ஒரு காப்புறுதி கட்டணம் உடைய ஒரு காப்பீடு திட்டத்தை விற்பனை செய்தாலே உங்களால் Rs.3000 வரை தரகு ஈட்ட முடியும்.

வேலை சார்ந்த சௌகரியங்கள்

வரையறுக்கப்பட்ட வேலை நேரம் கிடையாது எனவே ஓய்வு பெற்றவர்கள் தங்கள் விருப்பமான நேரப்படி காப்பீடு விற்பனை செய்யலாம். இதன் மூலம் தங்கள் ஓய்வுக்காலத்தை சந்தோஷமாக கழிக்க முடியும் அதே சமயம் விற்பனை பிரதிநிதியாக வருமானம் ஈட்டவும் முடியும்.

எனவே நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறாதீர்கள். மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியாகி உங்கள் கனவுகள் நிறைவேற மற்றுமொரு வருமான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்

காப்பீடு விற்பனையை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

Hear From Our Advisors

Become an insurance advisor