மிண்ட்ப்ரோவை
பயன்படுத்தி LIC காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்யுங்கள்


Sign Up
/ LIC / மிண்ட்ப்ரோவை பயன்படுத்தி LIC காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்யுங்கள்

LIC யை பற்றி

LIC (Life Insurance Corporation of India (LICI) உயிர் காப்பீடு நிறுவங்களின் ஒரு முன்னோடி நிறுவனமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் உயிர் காப்பீடு நிறுவனம் மிக அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. LIC நிறுவனம் இன்று 2048 கிளை அலுவலகங்களை பெற்றுள்ளது. LICஇன் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள இயல்பான நம்பிக்கையின் காரணமாக LIC இன் காப்பீடு திட்டங்களை வாங்க அவர்கள் தயாராக உள்ளனர். இதன் காரணமாக LIC காப்பீடு நிறுவனத்தின் முகவராக பணிபுரிய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

LIC காப்புறுதி ஒப்பந்தங்களை எவ்வாறு விற்பனை செய்வது?

LIC-இன் காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய நீங்கள் LIC இன் முகவராக வேண்டும். முகவராவதற்கு நீங்கள் பின்வரும் வழிகளை பின்பற்ற வேண்டும்.


 • நீங்கள் முகவாண்மையை LIC உடன் பதிவு செய்ய வேண்டும்
 • LIC பயிற்சி நிலையத்தில் 25 மணிநேர வகுப்பறை பயிற்சி எடுக்க வேண்டும்.
 • IRDAI மூலம் ஒரு தேர்வு நடத்தப்படும்
 • நீங்கள் காப்பீடு உரிமம் பெற தேர்வில் வெற்றி பெற்று LIC இன் முகவராக முடியும்.

உரிமம் பெற்ற பிறகு உங்களுக்கு தெரிந்த நபர்களை தனி தனியாக சந்தித்து LIC காப்புறுதி ஒப்பந்தங்களை விற்கலாம்,

LIC-யின் காப்பீடு திட்டங்களை எவ்வாறு விற்பனை செய்வது

LIC-காப்பீடுகளை இரண்டு முறைகளில் விற்பனை செய்ய முடியும் - ஆன்லைன் மற்றும் ஆப்லைன். இவை எவ்வாறு பணிபுரிகின்றன என்று புரிந்துகொள்வோம்.


 • Offline-ஆப்லைன் (இணைய தளத்துடன் இணையாத நிலை) முறையில் LIC காப்பீடுகளை விற்பனை செய்யும் முறை.

உங்களது வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து நீங்கள் விற்கலாம். திட்ட விவரங்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விளக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர் நீங்கள் பரிந்துரைத்த காப்புறுதி ஒப்பந்தங்களை வாங்க விருப்பம் தெரிவித்தவுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். விண்ணப்ப படிவம் நிறைவு செய்தவுடன் காப்பீடு கட்டணத்தை வசூல் செய்யவும். பின்னர் அருகாமையில் உள்ள LIC அலுவலகத்தை அணுகி காப்புறுதி ஒப்பந்தம் பெற வேண்டும். நீங்கள் விற்ற காப்பீடு ஒப்பந்தத்தை பதிவு செய்ய நீங்கள் காப்பீடு நிறுவனத்திற்கு சென்று உங்கள் காப்புறுதி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

 • ஆன்லைன் வழி - ஒரு எளிதான மாற்று

வாடிக்கையாளர்களை நேரில் சென்று சந்திப்பதை விட நீங்கள் மிண்ட்ப்ரோ மூலம் விற்பனை பிரதிநிதி ஆக முடியும். LIC காப்பீடு திட்டங்களை எளிமையாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மிண்ட்ப்ரோ உங்களுக்கு உதவுகிறது.

LIC காப்புறுதி ஒப்பந்தங்களை எவ்வாறு விற்பனை செய்வது

கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் ஆன்லைன் மூலம் LIC காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய முடியும்.


 • உங்களுடைய குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களின் பட்டியல் ஒன்று தயாரித்து அவர்களை அணுகவேண்டும்
 • உங்களுக்கு தெரிந்தவர்களின் பண தேவைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் காப்பீடு திட்டங்களை பற்றி கூறவும். பொருளாதார தேவைகளை புரிந்துகொண்டால் அவர்களுக்கு தேவையான காப்புறுதி திட்டங்களை உங்களால் பரிந்துரைக்க முடியும்.
 • வாடிக்கையாளர்களின் தேவைகள் தெரிந்த பின்னர் பொருத்தமான காப்புறுதி திட்டங்களை பரிந்துரைக்கவும். சேமிப்பிற்கான மானிய காப்பீடோ, குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களோ, ஓய்வு காலத்திற்கான ஓய்வூதிய திட்டங்களோ அல்லது செல்வ வளத்திற்கான யூலிப் திட்டங்களாகவும் இருக்கலாம்.
 • வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் திட்டத்தை நீங்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் அவர் உங்களிடமிருந்து காப்புறுதி வாங்க முடிவு செய்வார். அப்போது விண்ணப்ப படிவம் எழுத நீங்கள் அவருக்கு உதவ வேண்டும். விண்ணப்பத்தில் விவரங்களுடன் எழுத வேண்டும். மேலும் அவை சரியான விவரங்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவத்தில் உள்ளவை வாடிக்கையாளர்களுக்கு புரியவில்லை என்றால் அவற்றை விளக்கி அவர் முறையாக பூர்த்தி செய்வதற்கு உதவுங்கள்.
 • விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்த பின் ஆன்லைனில் காப்பீடு கட்டணத்தை செலுத்த உதவி செயது பின்னர் அவர்களுக்கு காப்புறுதி ஒப்பந்தங்களை பெற உதவி செய்ய வேண்டும்.

அவ்வளவுதான். இந்த முறைகளை பின்பற்றி உங்களால் சுலபமாக காப்பீடு திட்டங்களை விற்பனை செய்ய முடியும்.

LIC காப்பீடு முகவராவது குறித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்

மிண்ட்ப்ரோவின் நன்மைகள்

உங்களது வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வதற்கு உங்களுக்கு முழுமையான ஆதரவை மிண்ட்ப்ரோ அளிக்கிறது. உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான காப்பீடை தேர்வு செய்வதில் இருந்து அவர்களது உரிமை கோரல் வரை மிண்ட்ப்ரோ உங்களுக்கு ஆன்லைன் சேவைகளை அளிக்கிறது. நீங்கள் LIC காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்ய மிண்ட்ப்ரோவின் செயலியை உபயோகப்படுத்தலாம்.

நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யும்போது உங்களுடைய வாடிக்கையாளர்கள் செயலியின் மூலம் வாங்கிய காப்பீடு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும். காப்புறுதி ஒப்பந்தங்கள் விரைவில் வழங்கப்பட்டு உங்களுடைய இன்னல்களை தீர்த்துவைக்கிறது.

LIC இன் காப்பீடு திட்டங்கள் அல்லாமல் மற்ற காப்பீடு நிறுவனங்களின் திட்டங்களையும் உங்கள் வாடிக்கையாளர்கள் ஒப்பிட்டு பார்க்க முடியும். இதன் மூலம் குறைந்த காப்புறுதி தொகையில் சிறந்த காப்பீடு திட்டங்களை அவர்கள் வாங்க முடியும். அனைத்து காப்பீடு திட்டங்களின் விவரங்களையும் தங்கள் விரல் நுனியில் உங்களுக்கு மிண்ட்ப்ரோ செயலி அளிக்கிறது.

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்க உதவாது அல்லாமல் மிண்ட்ப்ரோ ஒரு முழுமையான ஆதரவு அளிக்கிறது. மிண்ட்ப்ரோ செயலியின் மூலம் தங்களுக்கு காப்பீடு திட்டங்களின் புதுப்பித்தல் தொடர்பான நினைவூட்டல்களும் மற்றும் உங்கள் விற்பனையை கண்காணிக்கவும் முடியும். தங்கள் வாடிக்கையாளர்களின் உரிமை கோரல் தொடர்பான உதவியையும் மிண்ட்ப்ரோ செயலி வழங்குகிறது. ஒரு காகிதமில்லா முறையின் மூலம் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்ய மிண்ட்ப்ரோ தங்களுக்கு உதவுகிறது. தங்களுடைய தொடர்புகளின் மூலம் காப்பீடு விற்பனையின் மட்டும் தங்கள் கவனத்தை செலுத்தினால் போதும் மற்றவற்றை மிண்ட்ப்ரோ செய்யும்.

தெரிந்து கொள்ளுங்கள் காப்பீடு விற்பனையின் மூலம் எவ்வளவு வருவாய் பெற முடியும் ?