இலவச பயிற்சி மற்றும் காப்பீடு முகவர் சான்றிதழ் பெற்றிடுங்கள் மிண்ட்ப்ரோவுடன்

காப்பீடு முகவர் ஆவதற்கான படிப்பு

ஒரு தனி நபர் காப்பீடு முகவர் ஆக விரும்பினால், அவர்/அவள் IRDA-வால் நிர்ணயம் செய்யப்பட்ட காப்பீடு முகவர் ஆவதற்கான சான்றிதழ் பெற வேண்டும் . இந்த படிப்பானது காப்பீட்டின் பொருள் மற்றும் செயல்பாடு குறித்து முகவர்களுக்கு கல்வி புகட்டுகிறது. இந்த சான்றிதழ் படிப்பை முகவர்கள் முறையாக புரிந்து கொள்ளவேண்டும் ஏனேனில் இதன் அடிப்படையில்தான் அவர்கள் முகவர்கள் தேர்வை எழுத வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் காப்பீடு பாலிசி விற்கும் உரிமம் அவர்களுக்கு வழங்கப்படும்.

பயிற்சியின் பாட புத்தகங்கள்

இந்த சான்றிதழ் பாடங்கள் IC 38 என்னும் புத்தகத்தில் அடங்கும். முகவர்களாக விரும்பும் அனைவரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும். இந்த படிப்பின் முக்கிய தலைப்புகள் பின்வருமாறு

  • காப்பீடு பொருளும் செயல்பாடுகளும்- காப்பீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, ஏன் காப்பீடு அவசியமாகிறது ஆகியவை இந்த தலைப்பில் விளக்கப்படுகிறது.
  • காப்பீட்டின் கொள்கை- தனி நபர் காப்பீட்டின் தனித்துவமான கொள்கைகள் இதில் விளக்கப்படுகிறது.
  • காப்பீடு திட்டங்கள்: சந்தையில் இருக்கும் காப்பீடு திட்டங்களை பற்றி விவரிக்கிறது.
  • உரிமை கோருதல்: உயிர் காப்புறுதி ஒப்பந்தத்தில் வரும் பல்வேறு உரிமை கோரல்கள் மற்றும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.
  • Underwriting: காப்புறுதி நிறுவனங்கள் எவ்வாறு காப்புறுதி ஒப்பந்தத்தில் உள்ள அபாயங்களை ஆராய்கின்றன என்று விவரிக்கும்.
  • தொழில் முறை காப்பீடு சந்தை- காப்பீடு சந்தையின் வடிவமைப்பு மற்றும் முகவர்கள் எவ்வாறு தொழில் செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது
  • தொழில் நன்னெறி- முகவர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் தொழில் நன்னெறி குறித்து விவாதிக்கும் பல்வேறு சட்ட திட்டங்களை விவரிக்கிறது
  • குறை தீர்த்தல்- காப்பீடுதாரர்கள் எவ்வாறு தங்கள் காப்பீடு சம்பந்தமான குறைகளை தெரிவித்து மற்றும் அதை தீர்ப்பது என்பது பற்றிய முக்கிய தலைப்பை விவரிக்கும்

மாதிரி வினாக்கள்

பொது காப்பீட்டு தேர்வு –

பின் குறிப்பிட்டுள்ளதில் வரும் நிலை இழப்பு முறைகள் என்ன ?

  • வங்கி வைப்பு நிதி
  • காப்பீடு
  • சம பங்குகள்
  • ரியல் எஸ்டேட்

வாடிக்கையாளருடன் உள்ள உறவு முறைகளில் முதல் எண்ணத்தை ஏற்படுத்துவது

  • நம்பிக்கையுடன் இருப்பது
  • நேரம் தவறாமை
  • ஆர்வம் காண்பித்தல்
  • நேரம் தவறாமை, ஆர்வம் காண்பித்தல் மற்றும் நம்பிக்கையுடன் இருத்தல்

கீழ்கண்டவற்றுள் எது தனி நபரின் நோயுற்ற நிலையை பாதிக்காது?

  • பால்
  • துணைவரின் வேலை
  • பழக்க வழக்கங்கள்
  • வீட்டின் இருப்பிடம்

இழப்பீடு கொள்கையின்படி, காப்பீட்டுதாரர் பணம் பெறுதல்-

  • காப்பீடு செய்த அளவுக்கான உண்மையான இழப்புகள்
  • காப்பீடு செய்த தொகை
  • இருதாரரும் ஒப்புக்கொண்ட ஒரு தொகை
  • உண்மையான நட்டம்

எந்த மாதிரியான கீழ்கண்ட சூழ்நிலைகளில் வீட்டில் வைத்து சிகிச்சை செய்ய ஒரு உடல் நல காப்புறுதி ஒப்பந்தம் அனுமதிக்கப்படும்?

  • அந்த நோயாளி மருத்துவமனை செல்லும் உடல் நிலையில் இருந்து அவரோ/ அவளோ அதை விரும்பவில்லை என்னும்போது
  • மருத்துவமனையிலோ அல்லது மருத்துவ இல்லத்திலோ இட வசதி இல்லாத போது
  • மருத்துவமனை / மருத்துவ இல்லத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் போது
  • மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் 24 மணி நேரத்திற்கு மேலாக இருக்கும்போது

உயிர் காப்பீடு தேர்வுகள்-

கீழ்கண்டவர்களில் யார் பெரும்பாலும் மாறுபடும் உயிர் காப்புறுதி ஒப்பந்தம் வாங்குகிறார்கள்?

  • நிலையான வருமானம் பெற விழைவோர்
  • பங்குகளில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க நினைப்போர்
  • பங்குகளை பற்றிய போதுமான அறிவு பெற்றவர்கள்
  • இளைஞர்கள்

பின்வரும் இழப்புகளில் முக்கிய நபர் காப்புறுதியின் பாதுகாக்கப்படும் ?

  • சொத்து திருட்டு
  • முக்கிய நபர் வேலை செய்ய முடியாத நீடிக்கப்பட்ட கால கட்டங்களில் வரும் இழப்புகள்
  • பொது இழப்புகள்
  • தவறுதல்களால் மற்றும் விடுகைகளால் ஏற்படும் இழப்புகள்

பின்வருவனவற்றில் காப்பீட்டு தொகையை எது தீர்மானிக்காது ?

  • இறக்கும் இயல்பு
  • தள்ளுபடி
  • இருப்பு நிதி
  • நிர்வாக செலவினங்கள்

கீழ்வரும் எந்த காலங்களில் வாங்கிய காப்புறுதி ஒப்பந்தத்தை திரும்ப தந்து பணத்தை திரும்ப பெற முடியும் ?

  • இலவச மதிப்பீடு
  • இலவச பார்வை
  • ரத்து செய்தல்
  • இலவச சோதனை முறை

காப்புறுதி ஒப்பந்தம் காலம் கடந்ததாக எப்போது கருதப்படும் ?

  • காப்பீட்டு கட்டணம் இறுதி நாளுக்குள் செலுத்தாத பொழுது
  • காப்பீட்டு கட்டணத்தை இறுதி நாட்களுக்கு முன்னதாக செலுத்தாத பொழுது
  • சலுகை நாட்களிலும் காப்பீட்டு கட்டணத்தை செலுத்தாத பொழுது
  • காப்புறுதி ஒப்பந்தத்தை திருப்பி அளிக்கும்போது

IRDAI தேர்வு

சான்றிதழ் படிப்பில் பயிற்சி எடுத்த பின்னர் IRDAI-வால்(Insurance Regulatory and Development Authority of India) ஒரு தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் பெறுபவர் காப்பீடு முகவர்களுக்கான உரிமம் பெற்று காப்புறுதி ஒப்பந்தம் விற்பனை செய்யலாம்.

மிண்ட்ப்ரோவின் பதிலீடு

தன்னிடம் தனி நபர்களை பதிவுபெற செய்து அவர்களை ஆன்லைன் (இணைய வழி) விற்பனை பிரதிநிதிகளாக்கும் ஒரு நிறுவனம் மிண்ட்பரோ. விற்பனை பிரதிநிதி பல்வேறு நிறுவனங்களின் லைப் மற்றும் பொது காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்யும் ஒரு முகவரும் ஆவர்.

விற்பனை பிரதிநிதியாகும் சான்றிதழ் படிப்பு மிகவும் எளிமையான ஒன்றாகும். 10ம் வகுப்பு படித்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்

இந்த சான்றிதழ் படிப்பானது ஆன்லைன் காணொளிகள் மற்றும் பயிற்சிகள் மூலமாவாகவும் கம்ப்யூட்டரிலோ அல்லது ஸ்மார்ட் போனிலோ அவரவர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அலுவலத்திலிருந்தோ பயில்வதற்கு எதுவாக கற்பிக்கப்படுகிறது . இந்த படிப்பில் பின்வருவனவை அடங்கும்

  • காப்பீட்டின் கோட்பாடுகளும் செயல் முறைகளும்
  • இந்தியாவின் காப்பீடு சந்தை
  • காப்பீட்டின் வகைப்பாடுகள்
  • உடல்நல மற்றும் தனி நபர் விபத்து காப்பீடு
  • காப்பீட்டிற்கு தேவையான ஆவணங்கள்
  • காப்புறுதி தொகை
  • உரிமை கோரல்
  • காப்பீடுதாரர்களின் நலம் பேணல்
  • குறை தீர்க்கும் முறைகள்
  • AML மற்றும் KYC வழிகாட்டுதல்கள்
  • விற்பனை பிரதிநிதி செய்ய மற்றும் செய்ய கூடாதவை

மாதிரி காணொளியை இங்கே காண்க

சான்றிதழ் படிப்பு முடிந்தவுடன் ஆன்லைன் தேர்வு ஒன்று நடத்தப்படும். அதில் 40% மதிப்பெண் வாங்குபவர்கள் விற்பனை பிரதிநிதியாக (point of sale person) மிண்ட்பரோவுடன் இணைந்து பணியாற்றலாம்

நீங்கள் முகவர்களுக்கான கடினமான சான்றிதழ் படிப்பை விரும்பவில்லை என்றால் நீங்கள் மிண்ட்ப்ரோவில் இணைந்து ஆன்லைன் சான்றிதழ் படிப்பை முடித்து விற்பனை பிரதிநிதியாக முடியும்.

காப்பீடு முகவர்களுக்கான தேர்வுகளை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

Become an insurance advisor