LIC முகவர்களுக்கான அனைத்து தகவல்கள்


Sign Up
/ LIC / LIC முகவர்களுக்கான அனைத்து தகவல்கள்

LIC பற்றி

LIC உயிர் காப்பீடு நிறுவன சந்தையில் மிகவும் பிரசித்தி பெற்றது. பல்லாண்டு காலமாக இருப்பதால் மக்களுக்கு அதன் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு காப்பீடு திட்டங்களை LIC வழங்குகிறது. முற்றிலும் காக்கும் திட்டங்களிலிருந்து, சேமிப்பு மற்றும் முதலீடு வழங்குகிறது. ஒவ்வொருவருக்கும் தேவையான திட்டங்கள் LIC-யில் உண்டு. நீங்கள் LIC முகவராகி உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் LIC காப்பீடு திட்டங்களை விற்க முடியும். நீங்கள் விற்கும் திட்டங்கள் மூலம் தரகு(கமிஷன்) வருமானம் ஈட்ட முடியும்.

LIC காப்பீடு முகவராவது எப்படி ?

LIC முகவராகி அதன் காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்ய நீங்கள் IRDAI நிர்ணயம் செய்த தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். நீங்கள் 25 மணிநேர வகுப்பறை பயிற்சி எடுத்து பாடத்திட்டங்களை கற்ற பின்னர் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றால்தான் நீங்கள் முகவர் உரிமம் பெற முடியும்

LIC முகவர் தேர்வு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


    தேர்விற்கான வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்கள் IC38-இல் வழங்கப்பட்டுள்ளது. காப்பீடின் (பாலிசிகள்)கோட்பாடுகள், செயல்பாடுகள், மற்ற நுட்பமான தகவல்களை பற்றி அறிந்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    இந்த தேர்வு குறிப்பிட்ட மையங்களில் இருந்து ஆன்லைன் மூலம் எழுதப்படுகிறது. எனவே குறிப்பிட்ட மையங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டும்.

    ஒரு மதிப்பெண்ணிற்கான 100 வினாக்கள் அடங்கும். நீங்கள் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும். எந்த மாதிரி வினாக்கள் கேட்கப்படும் என்று நீங்கள் அறிய விரும்பினால் சில மாதிரி வினாக்கள் இங்கே தரப்பட்டிருக்கின்றன. (காப்பீடு முகவர் சான்றிதழ்) பயிற்சியுடைய மாதிரி வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளது) சில மாதிரி வினாக்கள் ( விடைகள் தடித்த எழுத்துக்களில்) பின்வருமாறு

    • எதிர்பாரா நிகழ்வுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பின்வருவனவற்றில் எதை நீங்கள் பரிந்துரைப்பீர்கள் ?
      • காப்பீடு
      • வங்கி வைப்பு நிதி
      • பங்குகள்
      • கடன் பத்திரங்கள்
    • பின்வருவனவற்றில் எதை ஆபத்து என நிர்ணயம் செய்ய முடியாது?
      • சிறுவயதில் இறப்பு
      • அனாயச மரணம்
      • இயற்கையான தேய்மானங்கள்
      • குறைபாட்டுடன் வாழ்தல்
    • காப்பீடு குறைகேள் அதிகாரியிடம் எவ்வாறு குறைகளை தெரிவிப்பது ?
      • குறைகளை எழுத்து மூலம் தெரிவிப்பது
      • குறைகளை தொலைபேசி மூலம் தெரிவிப்பது
      • குறைகளை நேருக்கு நேர் சந்தித்து தெரிவிப்பது
      • செய்தித்தாள் அறிவுப்பு மூலம் தெரிவிப்பது
    • பின்வரும் உரிமை குரல்களில் முன்கூட்டிய இறப்பு உரிமை குரலாக எது கருதப்படும்?
      • காப்புறுதியுறுனர் காப்புறுதி ஒப்பந்த காலத்தின் இரண்டு வருடங்களுக்குள்ளாக இறத்தல்
      • காப்புறுதியுறுனர் காப்புறுதி ஒப்பந்த காலத்தின் ஐந்து வருடங்களுக்குள்ளாக இறத்தல்
      • காப்புறுதியுறுனர் காப்புறுதி ஒப்பந்த காலத்தின் ஏழு வருடங்களுக்குள்ளாக இறத்தல்
      • • காப்புறுதியுறுனர் காப்புறுதி ஒப்பந்த காலத்தின் பத்து வருடங்களுக்குள்ளாக இறத்தல்
    • ULIP திட்டங்களில் முதலீடு ஆபத்துகளை யார் சந்திக்கிறார்?
      • காப்புறுதி செய்து கொள்ளுபவர்
      • காப்புறுதியுறினர்
      • மாநிலம்
      • IRDA
    நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் முகவர் உரிமம் பெற முடியும். முதல் முறை உங்களால் தேர்ச்சி பெற இயலவில்லை என்றல் நீங்கள் மறுமுறை தேர்வு எழுதலாம்.

LIC முகவர் பயிற்சியை பயிற்சியை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

LIC முகவர் தேர்வு சற்றே கடினமான ஒன்றாகும் அது உங்களுக்கு சிறிது கடினமாக இருக்கலாம். LIC காப்பீடு திட்டங்களை விற்பனை செய்ய வேறு ஒரு வழி உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்

LIC முகவர் தேர்வு ஏன் அவசியமாகிறது?

கீழ்கண்ட காரணங்களால் முகவர் தேர்வு தேவைப்படுகிறது.


  • இந்த தேர்வுகள் IRDAI-யால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
  • காப்பீட்டின் (பாலிசிகள்)கோட்பாடுகள் குறித்து தேர்வு எழுதுவோரின் அறிவை பரிசோதனை செய்கிறது. வரப்போகும் முகவர்களுக்கு அவர் தொழில் மேற்கொள்ள போகும் துறை தெரிந்திருப்பதை உறுதி செய்கிறது. மொத்தத்தில் அறிவார்ந்த நபர்களே உரிமம் பெற்று காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்வதை உறுதி செய்கிறது.

மிண்ட்ப்ரோ தேர்வுகள்

மிண்ட்ப்ரோ என்றால் என்ன ?


மிண்ட்ப்ரோ ஆன்லைன் மூலம் உங்களை ஒரு விற்பனை பிரதிநிதியாக்குகிறது. விற்பனை பிரதிநிதி ஆவதன் மூலம் நீங்கள் LIC மற்றும் அனைத்து காப்பீடு நிறுவனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய முடியும்.


விற்பனை பிரதிநிதி (POSP) என்றால் என்ன ?


விற்பனை பிரதிநிதி IRDAI வழிகாட்டுதல்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு வகை முகவாண்மையின் கீழ் நீங்கள் பயிற்சி எடுத்து தேர்வு எழுத வேண்டும். எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய 15 மணிநேர காணொளி பாகங்களை உடையது. POSPக்கான பாட திட்டங்கள் சிறியது மற்றும் காணொளி தொகுப்புகள் பாடத்திட்டங்களை எளிதில் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவுகிறது. POSP பாடத்திட்டங்களை இங்கே காண்க.

ஆன்லைன் பயிற்சி முடிந்தவுடன் மிண்ட்ப்ரோ மூலமாகவே நீங்கள் தேர்வு எழுத முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவுடன் நீங்கள் மிண்ட்ப்ரோவின் ஒரு விற்பனை பிரதிநிதி (POSP) ஆகலாம்.

மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியாக உங்களால் உரிமம் பெற்று எளிதான முறையில் LIC காப்புறுதி ஒப்பந்தங்களை விற்க முடியும்.

மிண்ட்ப்ரோ தேர்வு எதனால் மேலானது?

மிண்ட்ப்ரோ தேர்வுகள் கீழ்கண்டவைகளை உள்ளடக்கிய பல நன்மைகளை உடையதாகும்


  • IC 38யை விட குறுகிய பாடத்திட்டங்களை கொண்டது மேலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது.
  • ஆன்லைன் தேர்வாக இருப்பதால் இதை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எழுத முடியும். நீங்கள் வெளியில் உள்ள நிலையங்களுக்கு செல்ல தேவை இல்லை.
  • உயிர் மற்றும் பொது காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பதற்கு உரிமம் பெற்று தருகிறது.

நீங்கள் IRDAI நிர்ணயிக்கப்பட்ட முகவரோ அல்லது எளிதான மிண்ட்ப்ரோ தேர்வோ. தேர்வு உங்கள் கையில்

LIC காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பது பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்