ஒரு முழுமையான வழிகாட்டுதலின் மூலம்
TurtlemintProவுடன் எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக மாறுவது


Sign Up
/ LIC / ஒரு முழுமையான வழிகாட்டுதலின் மூலம் TurtlemintProவுடன் எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக மாறுவது

எல்.ஐ.சி ஏஜெண்ட்டாவது எப்படி?

ஏஜெண்ட்டாவது மற்றும் ஆயுள் காப்பீட்டை விற்பது என்பது ஒரு நல்ல வேலைக்கான தேர்வு போன்று இருப்பதால் பல தனி நபர்கள் அளவுக்கு அதிகமான வருமானத்தை கண்கூட பார்க்கின்றனர். அதனால் தான் மக்கள் அவற்றை முயற்சித்து ஆயுள் காப்பீட்டு ஏஜெண்ட்டுளாக ஆகின்றனர்.

எல்.ஐ.சி :

ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) பெரும்பாலான தனிநபர்களின் முதன்மை தேர்வாகும். இந்த நிறுவனம் முதலில் நிறுவப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்பதால், பல ஆண்டு காலமாக சந்தையில் இருந்து வருகின்றது, ஆகையால்தான் காப்பீட்டு ஏஜெண்ட்டுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 1956 ஆம் ஆண்டில் எல்.ஐ.சி உருவாக்கப்பட்டு இந்திய காப்பீட்டு சந்தையில் ஒரே ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருந்து வருகின்றது. அதன் பின்னர், 2000 ஆம் ஆண்டு முதல் தனியார் காப்பீட்டுச் சந்தையில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் விற்கப்பட்டதில் எல்ஐசி தனக்கென ஒரு இடத்தைபெற்றிருக்கிறது. இன்றும், இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கும்போது அவற்றுள் ஒரு தலைசிறந்த நிறுவனமாக திகழ்கிறது

எனவே, நீங்கள் ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட்டாக ஆக வேண்டுமானால், இதோ எவ்வாறு ஆக முடியும் என்பதை காண்போம்.

எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆவதற்கு தேவையான வழிமுறைகள்:

1. தேவையான தகுதிகள்:

எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆவதற்கு நீங்கள் ஏஜெண்சியில் விண்ணப்பிக்க உங்களுக்கு குறைந்தபட்ச தகுதி இருக்க வேணடும். பின்வருவனவற்றுள் அதைப் பற்றி காண்போம்.

 • உங்களின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
 • நீங்கள் ஒரு கிராமப்புற பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு நகர்ப்புற பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் குறைந்தது 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலே உள்ள இரண்டு தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்தால், எல்.ஐ.சி ஏஜெண்ட் அவதற்கான பின்வரும் செயல்முறைகளை நீங்கள் தொடரலாம். ஒரு ஏஜெண்ட்டாக மாறுவதற்கான செயல்முறைகள் பின்வருமாறு உள்ளன–

2. எல்.ஐ.சி ஏஜெண்ட்டாக ஆவதற்கான செயல்முறை:

 • ஒரு ஏஜெண்ட்டாக நீங்கள் உங்கள் திட்ட வடிவத்துடன் மேலாளர் அல்லது எல்.ஐ.சியின் உயர் அதிகாரியுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
 • எல்ஐசி அலுவலர் அல்லது மேலாளர் எல்.ஐ.சி நிறுவனத்தின் ஏஜெண்ட்டாக செயல்படுவதற்கு தகுதியுடையவரா என்பதை மதிப்பீடு செய்ய ஒரு நேர்காணலை நடத்துவார்.
 • நீங்கள் இந்த நிறுவனத்திற்கு பொருத்தமானவராக இருந்தால், நீங்கள் (IRDAI) தேர்வுக்கு பதிவு செய்ய வேண்டும்.
 • பதிவுசெய்த பிறகு, எல்.ஐ.சி.யின் பிரதேச அலுவலகம் அல்லது பயிற்சி மையத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள், அங்கு நீங்கள் IRDAI (இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்)தின் 25 மணிநேர பரிந்துரைக்கபட்ட பயிற்சிக்கு உட்படுத்தப்படுவீர்கள்.
 • பயிற்சி முடிந்தபிறகு, IRDAI (இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) வைக்கப்படும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
 • தேர்வில் தேர்ச்சிப்பெற குறைந்தது நாற்பது சதவீத(40%) மதிப்பெண்களை பெற்றிருக்கவேண்டும்.
 • நீங்கள் அப்படி தேர்வில் தேர்ச்சிப்பெற்றால், எல்.ஐ.சி ஏஜெண்ட்டாக வேலை செய்வதற்கான நியமன கடிதம் மற்றும் உரிமம் வழங்கப்படும்.

உரிமம் கிடைத்தவுடன், நீங்கள் எல்.ஐ.சி மூலம் வழங்கப்படும் ஆயுள் காப்பீடு திட்டங்களை விற்கக்கூடிய ஒரு சான்றளிக்கப்பட்ட எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக ஆகலாம்.

ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆவதன் நன்மைகள்:

காப்பீட்டு பாலிசிகளை விற்பது என்பது பல நபர்களால் ஆதரிக்கப்படுகிறது. ஏனென்று உங்களுக்கு தெரியுமா?
ஏனென்றால், எல்.ஐ.சி. ஏஜெண்டாகி பல நன்மைகளை பெற்றுள்ளது. அவர்கள் என்ன கண்டுபிடிப்பார்கள்? படிக்கவும் -

 • அதிகமான வருமானத்தை பெறமுடியும்

ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட்டாக, நீங்கள் தான் முதலாளி. நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப வேலை செய்து கொள்ளலாம். ஒரு வழக்கமான 9 மணி முதல் 5 மணி வரை வேலைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே வசதிக்கு ஏற்ப வேலையை செய்துக்கொள்ள முடியும்.

 • நெகிழ்வான பணி அட்டவணை

ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட்டாக, நீங்கள் தான் முதலாளி. நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்ப வேலை செய்து கொள்ளலாம். ஒரு வழக்கமான 9 மணி முதல் 5 மணி வரை வேலைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே வசதிக்கு ஏற்ப வேலையை செய்துக்கொள்ள முடியும்.

 • பக்க வருவாய் உண்டு

ஏற்கனவே வேலையில் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும். நீங்கள் ஒரு காப்பீட்டு ஏஜெண்ட் ஆக முடியும் மேலும் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

 • ஓய்வூதிய வயது இல்லை

அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு வரம்பற்ற வேலை செய்யும் வயதை உறுதிபடுத்துகிறது. இது உங்கள் சொந்த தொழிலாக இருப்பதால், நீங்கள் விரும்பும் வரை காப்பீட்டு பாலிசிகளை விற்கலாம்.

Point of Sale Person (PoSP) ஆவதற்கான மாற்று வழிகள்:

எல்.ஐ.சி உடன் மட்டுமே ஒரு ஏஜெண் ட்டாவதற்கு பதிலாக, நீங்கள் ஒரு Point of Sale Person (PoSP) ஆக முடியும்.

PoSP (Point of Sale Person) என்றால் என்ன?

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) உருவாக்கிய புதிய வகை ஏஜெண்ட் தான் Point of Sale Person (PoSP), எல்.ஐ.சி மட்டுமல்ல, மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் காப்பீட்டு பாலிசிகளை விற்க முடியும். மேலும், நீங்கள் ஒரு Point of Sale Person (PoSP) ஆக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களின் பொது காப்பீட்டு பாலிசிகளை விற்கலாம். எனவே, ஒரு Point of Sale Person (PoSP) நீங்கள் தேர்வு செய்யக்கூடிய ஏஜென்சியின் பறந்த நோக்கமாகும்.

TurtlemintPro உடன் Point of Sale Person (PoSP) ஆவது எப்படி?

 • உங்களின் வயது 18 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
 • மேலும், உங்கள் கல்வித் தகுதி பொறுத்தவரை நீங்கள் கிராமப்புறப் பகுதியிலோ நகர்ப்புற ஒன்றிலோ வசிக்கிறீர்களானால் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே முடித்துருந்தால் கூட போதுமானதாகும். எனவே, ஒரு Point of Sale Person (PoSP) ஆவது என்பது மிகவும் எளிது.
 • நீங்கள் ஒரு Point of Sale Person (PoSP) ஆக TurtlemintPro வலைத்தளத்தில் ஆன்லைனில் மூலம் பதிவு செய்யலாம்.
 • நீங்கள் TurtlemintPro அளிக்கும் 15 மணிநேர பயிற்சியை எதிர்கொள்ள வேண்டும் மற்றும் அந்த பயிர்ச்சியானது எல்.ஐ.சி பயிற்சியை விட மிகவும் சுலபமானது. மேலும், வகுப்பு அறைக்குச் சென்று பயிற்சி எடுக்க தேவை இல்லை. நீங்கள் TurtlemintPro website அல்லது Mobile Application.Mobile applicationபயன்படுத்தி அணுகக்கூடிய ஆன்லைன் பயிற்சி தொகுதிகள் உள்ளன.
 • IRDAI-யின் பரிந்துரைக்கப்படும் பாடத்திட்டத்தின் கீழ் TurtlemintPro வடிவமைக்கப்பட்ட பயிற்சி தொகுதிகள் முடிவடைந்தவுடன், TurtlemintPro வால் நடத்தப்படும் ஒரு தேர்வு உள்ளது. கணினி அல்லது மடிக்கணினி மூலமாகவும் உங்களுக்கு ஏற்ற மாதிரியான எந்த ஒரு நேரத்திலும் இத்தேர்வை நீங்கள் எழுதிக்கொள்ளலாம்.
 • தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் உங்களுக்கு Point of Sale Person (PoSP) வேலை செய்வதற்கான உரிமம் வழங்கப்படும்.

TurtlemintPro உடன் Point of Sale Person (PoSP) ஆவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

எல்ஐசி ஏஜெண்டாக ஆனவுடன் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் தவிர, TurtlemintPro உங்களுக்கு கூடுதல் நன்மைகள் அளிக்கிறது. TurtlemintPro உடன், உங்களுக்கு கிடைக்கப்போகும் கூடுதல் நன்மைகள் பின்வருமாறு-


 • ஒரே உரிமையை வைத்துக்கொண்டு ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு பாலிசிகளை விற்க முடியும்.
 • எல்.ஐ.சி உட்பட பல காப்பீட்டு நிறுவனங்களை நீங்கள் முன்னின்று வழிநடத்தலாம்.
 • காப்பீட்டு பாடத்திட்டங்களை நன்கு புரிந்து கொள்ளும்படியான எளிய பயிற்சிகள் உள்ளன.

TurtlemintPro சுலபமாக ஒருவரை Point of Sale Person (PoSP) ஆக்குவதோடு காப்பீட்டுகளை விற்கவும் ஆன்லைனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக விரும்பினால், எல்.ஐ.சி உடன் ஒன்றிணைந்து எல்.ஐ.சி. பாலிசிகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும் அல்லது நீங்கள் TurtlemintPro ஐ தேர்ந்தெடுத்து எல்.ஐ.சி யின் திட்டங்களை உள்ளடக்கிய பல்வேறு நிறுவனங்களின் பல்வேறு காப்பீட்டு திட்டங்களை அணுகலாம். எனவே, காப்பீட்டு நிறுவனம் வாழ்க்கையின் விருப்பமான தேர்வாக இருந்தால், TurtlemintPro ஐ தேர்வுசெய்து நன்மைகள் பெறுங்கள்.

மேலும் தெரிந்து கொள்ள எவ்வளவு பணம் நான் காப்பீட்டை விற்பது?