ஒரு முழுமையான வழிகாட்டுதலின் மூலம் TurtlemintPro-வுடன் பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு ஏஜெண்ட்டாக ஆவது.


Sign Up
/ ஒரு முழுமையான வழிகாட்டுதலின் மூலம் TurtlemintPro-வுடன் பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு ஏஜெண்ட்டாக ஆவது.

பஜாஜ் அலையன்ஸ் :

காப்பீட்டு ஏஜெண்ட்டாக ஆவது என்பது வாழ்க்கைக்கான சிறந்த தேர்வு மற்றும் இதில் நீங்கள் உங்களுக்கு ஏற்ற நேரங்களில் வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். அதனால்தான் தனிநபர்கள் பலரும் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒரு வலுவான வாழ்க்கையை உருவாக்குக்கின்றனர். மேலும், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீட்டுத் துறையின் இரு பகுதிகளிலும் சந்தையில் முன்னணி காப்பீட்டு நிறுவனமாக இருந்து வருகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான தயாரிப்புகளை வழங்குகிறது. எனவே, பஜாஜ் அலையன்ஸுடன் ஒரு ஏஜெண்ட்டாக நீங்கள் விரும்பினால், அதை எப்படி அடைவது என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.

 • நீங்கள் 18 வயது மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் மக்கள்தொகை 5000 வரை உள்ள ஒரு பகுதியில் வாழ்கிறீர்கள் என்றால் 10 ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். அதற்கு மேலும் மக்கள்தொகை கொண்ட பகுதியில் வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.
 • நீங்கள் பஜாஜ் அலையன்ஸ் உடன் விண்ணப்பிக்க வேண்டும், பதிவு படிவத்தை பூர்த்தி செய்து மற்றும் காப்பீடு தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
 • பஜாஜ் அலையன்ஸ் மூலம் நடத்தப்படும் 25 மணிநேர வகுப்பறை பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்.
 • மேற்கண்ட பயிற்சிகளை முடித்தவுடன், நீங்கள் ஒரு காப்பீட்டு ஏஜெண்ட் தேர்வை எதிர்கொள்ள தகுதி உள்ளவராக ஆவீர்கள்.
 • இத்தேர்வானது குறிப்பிட்ட மையங்களில் ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சிப் பெற குறைந்தபட்சம் 40% மதிப்பெண்ணை பெற வேண்டும்.
 • வைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், உங்களுக்கு காப்பீட்டு ஏஜெண்ட்டுக்கான உரிமம் வழங்கப்படும்.

இந்த உரிமம் பஜாஜ் அலையன்ஸ் ஏஜெண்ட்டாகவும் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாலிசிகளை விற்பனை செய்ய அனுமதிக்கின்றது.

பஜாஜ் அலையன்ஸ் ஏஜெண்ட்டாக ஆவதற்கு ஒரு எளிய வழி:

மிகவும் எளிமையான முறையில் பஜாஜ் அலையன்ஸ்வுடன் ஏஜெண்ட்டாக ஆக மற்றறொரு வழி உள்ளது. TurtlemintPro-வில் நீங்கள் ஒரு Point of Sale Person (PoSP) ஆகவும், பஜாஜ் அலையன்ஸ் பாலிசிகள் மற்றும் வேறு காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளையும் விற்க அனுமதி அளிக்கின்றது. உண்மையில், நீங்கள் ஒரு Point of Sale Person (PoSP) இருப்பதினால் பொது காப்பீட்டு பாலிசிகளை கூட விற்க முடியும். எனவே, பஜாஜ் அலையன்ஸ் ஏஜெண்ட்டாக உங்களால் பஜாஜ் அலையன்ஸ் திட்டங்களை மட்டும் விற்க முடியும்பட்சத்தில், TurtlemintPro Point of Sale Person (PoSP) பல வகையான பொருள்களை விற்க அனுமதிக்கின்றது.

 • குறைந்தது 18 வயது இருக்க வேண்டும்.
 • 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
 • TurtlemintPro-வில் பதிவு செய்ய வேண்டும்.
 • TurtlemintPro-வால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் வீடியோக்களின் மூலம் 5 மணிநேரங்களுக்கு ஆன்லைனில் பயிற்சி பெறவும். பயிற்சியை உங்கள் தொலைபேசி அல்லது கணினி வழியாக எடுத்துக்கொள்ளலாம். எனவே, எந்த வகுப்பறை பயிற்சியிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை.
 • ஆன்லைன் தேர்வை வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ எழுதி கொள்ளலாம். இந்த தேர்வு மிகவும் எளிதாகவும் மாறிடும் சிறிய குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
 • Point of Sale Person (PoSP) ஆக உரிமத்தை பெறவதற்கு, தேர்வில் தேர்ச்சி பெறவும்.

நீங்கள் உரிமம் பெற்றபின், நீங்கள் பஜாஜ் அலையன்ஸ் மற்றும் பிற நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்களை எளிதாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம். TurtlemintPro உங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதில் இறுதி வரை உதவியளிக்கும்.

வகுப்பறையின் வாயிலாக பயிர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவைகள் இல்லாததாலும், உங்கள் வசதிக்கேற்ப ஆன்லைனில் பயிற்சி எடுத்து கொள்வதினாலும், Point of Sale Person (PoSP) ஆவது எளிது. மேலும், Point of Sale Person (PoSP) தேர்வின் பாடத்திட்டங்கள் TurtlemintPro வால் வழங்கப்படும் ஆன்லைன் வீடியோவின் மூலம் எளிமையாகவும், எளிதாக புரிந்து கொள்ளும்படி வகையில் இருக்கிறது.

எனவே, காப்பீட்டை விற்பனை செய்வதை நீங்கள் தேர்வுசெய்த வாழ்க்கைக்கு ஒரு சரியான பாதை என்றால் Point of Sale Person (PoSP) ஆவதின் மூலம் பஜாஜ் அலையன்ஸ் பாலிசிகள் மற்றும் வேறு ஆயுள் காப்பீட்டார்களின் பாலிசிகளை விற்பனை செய்யலாம்.

இந்த இணைப்பில் உள்ளதை படியுங்கள் How much money I will earn selling insurance?