LIC முகவராக தேவையான அனைத்து விவரங்களையும் பெறுக.


Sign Up
/ LIC / LIC முகவராக தேவையான அனைத்து விவரங்களையும் பெறுக.

LIC பற்றி சுருக்கமாக:

LIC 250 மில்லியன் தனி நபர் வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு முன்னணி காப்பீடு நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையாகவும் எடுத்து கொள்ளுங்கள் அல்லது காப்பீடு சந்தையின் மீது அது கொண்டிருக்கும் ஆளுமையாகவும் எடுத்து கொள்ளுங்கள். LIC மக்கள் விரும்பும் ஒரு உயிர் காப்பீடு நிறுவனமாக திகழ்கிறது. இந்த நிறுவனமானது பல்வேறு வகையான காப்பீடு திட்டங்களை வைத்துள்ளது. நீங்களும் LIC-யில் இணைந்து அதன் முகவர் ஆகலாம். உண்மையில் காப்பீடு முகவர் தொழில் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதால் அது மிகவும் பயனுள்ளது. நீங்கள் LIC முகவர் ஆக விரும்பினால் சில விதிமுறைகளை பின்பற்றி நீங்களும் உரிமம் பெற முடியும். விதிமுறைகளை அறிந்து கொள்வோம்-


  • LIC-யில் பதிவு செய்ய வேண்டும்
  • அதன் கோட்பாடுகளை (பாலிசிகளை) அறிந்து கொள்ள பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
  • IRDAI-வால் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வெழுத வேண்டும்.
  • தேர்வில் வெற்றி அடைந்து உரிமம் பெற்று LIC முகவர் ஆகுங்கள்

LIC முகவர் பயிற்சி என்றால் என்ன?

IRDAI-யின் வழி காட்டுதல்களின் படி ஒரு தனி நபர் முகவர் ஆக வகுப்பறை பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்வு செய்யும் முகவாண்மையை பொறுத்து பயிற்சி காலம் நிர்ணயிக்கப்படும். ஆகவே நீங்கள் LIC முகவர் ஆக விரும்பினால் காப்பீட்டின் கோட்பாடுகளை (பாலிசிகளை) அறிந்து கொள்ள அதற்கான நிர்ணயம் செய்யப்பட்ட 25 மணி நேர வகுப்பறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பயிற்சி ஏன் தேவைப்படுகிறது ?

காப்பீடு என்பது ஒரு நுட்பமான கோட்பாடாகும் . நீங்கள் காப்புறுதி ஒப்பந்தம் விற்பனை செய்வதற்கு முன்னால் அதன் அடிப்படை கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். காப்பீடு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிந்து வைத்துள்ளவர்களுக்கு உரிமம் கொடுக்கும் வகையில் IRDAI-வால் தேர்வின் மூலம் சோதனை செய்யப்படுகிறது. ஆகவே காப்பீட்டின் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை விளக்கவும் மற்றும் காப்புறுதி ஒப்பந்தங்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது பற்றியும் மேலும் உங்களை தேர்வில் வெற்றி பெற செய்யவும் பயிற்சி அவசியமாகிறது.

LIC முகவர் பயிற்சியின் நன்மைகள்

மாதிரி தேர்வுகள்


  • பயிற்சியின் மூலம் பெரும் விவரங்களை வைத்து உங்களால் IRDAI-வின் தேர்வில் வெற்றி பெற முடியும்.
  • காப்பீட்டின் பல்வேறு விதமான விவரங்களை அறிந்துள்ள ஒரு காப்பீடு முகவர் ஆகிறீர்கள் .
  • விவரம் அறிந்த முகவராக வாடிக்கையாளர்கள் கேட்கும் நுட்பமான சந்தேகங்களை தீர்த்து வைக்க முடிகிறது.

LIC முகவர் பயிற்சியை பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

முகவராக 25 மணிநேர வகுப்பறை பயிற்சி மேற்கொள்ளல் வேண்டும். இது IRDAI-வால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பயிற்சியாகும். இந்த பயிற்சி LIC-யின் கோட்ட அலுவகங்களிலோ அல்லது அதன் பயிற்சி நிலையங்களிலோ நடைபெறும். LIC-யின் சில கிளைகள் மற்றும் அலுவகங்களின் முகவரிகள் பின்வருமாறு.

LIC-யின் சில கிளைகள் மற்றும் அலுவகங்களின் முகவரிகள்

Branch name (கிளையின் பெயர்) Address (முகவரி)
LIC of India, டெல்லி CAB 1021 LIC of India, டெல்லி CAB 1021 18/60, கீதாகாலனி டெல்லி 110031
LIC of India, பம்பாய் கிளை அலுவலகம் 883, 1st Floor East Wing Yogakshema Mumbai 400021
LIC of India, Calcutta (CBO-7) LIC of India, Calcutta (CBO-7) 64 கணேஷ்சந்திரா avenue கொல்கத்தா 700013
Hirak Avenue, Nehru Park Hirak Avenue, Nehru Park, Vastrapur, Ahmedabad 380015
NO.8, 17TH STREET, NO.8, 17TH STREET,, 3RD மெயின் ரோடு, நங்கநல்லூர் சென்னை 600061

உங்கள் அருகாமையில் உள்ள மற்ற அலுவலகங்கள் பற்றி அறிய இணைப்பை பார்க்கவும். LIC office addresses

மேலும் LIC முகவர் தேர்வு மற்றும் அதற்கான தயார் முறைகள் பற்றி படிக்கவும்.

மிண்ட்ப்ரோ எவ்வாறு உதவுகிறது ?

மிண்ட்ப்ரோ உங்களை ஒரு விற்பனை பிரதிநிதியாக்கி உயிர் மற்றும் பொது காப்பீட்டு நிறுவங்களின் காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்ய அனுமதிக்கிறது. மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதி வாய்ப்பை தேர்வு செய்வதன் மூலம் மற்றும் பிற முன்னணி நிறுவனங்களின் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்யும் தேர்வும் உங்களுக்கு கிடைக்கிறது.

மிண்ட்ப்ரோ பயிற்சி

IRDAI-வின் நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி விற்பனை பிரதிநிதியாவதற்கு மிண்ட்ப்ரோவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது உங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக அணுக கூடிய ஒரு எளிமையான ஆன்லைன் பயிற்சியாகும். வகுப்பறை பயிற்சி இல்லாமல் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் உங்கள் இல்லம் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே பயிற்சி மேற்கொள்ளலாம்.

பயிற்சிக்காலம் 15 மணிநேரங்கள் இது ஆன்லைன் காணொளி மூலம் உங்கள் பயிற்சியை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.

பயிற்சி முடிந்தவுடன் மிண்ட்ப்ரோ நடத்தும் எளிமையான ஆன்லைன் தேர்வில் நீங்கள் எழுத முடியும். தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் காப்புறுதி ஒப்பந்தங்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனை பிரதிநிதியாக முடியும்.

எனவே மிண்ட்ப்ரோவை தேர்வு செய்து விற்பனை பிரதிநிதியாகுங்கள். LIC மட்டுமல்லாது பிற காப்பீடு நிறுவனங்களின் உயிர் மற்றும் பொது காப்பீடு முகவராக பணியாற்றமுடியும்.

மேலும் காப்பீடு விற்பனையின் மூலம் எவ்வளவு வருவாய் பெற முடியும் என்று தெரிந்து கொள்ளுங்கள்