மிண்ட்ப்ரோவை பயன்படுத்தி 30க்கும் மேலான காப்பீடு நிறுவங்களின் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வீர்


Sign Up
Home / மிண்ட்ப்ரோவை பயன்படுத்தி 30க்கும் மேலான காப்பீடு நிறுவங்களின் காப்பீடு திட்டங்களை விற்பனை செய்வீர்

நிதி ஆலோசகரை பற்றி..

நிதி ஆலோசகர்கள் நிதி வல்லுநர்கள் ஆவர். மேலும் தங்களது வாடிக்கையாளர்களின் நிதி மேலாண்மைக்கு மேலான கருத்துகளை கூறி வழிகாட்டுபவர்கள். தங்களது வாடிக்கையாளர்கள் எங்கே முதலீடு செய்தால் நல்ல வருமானம் மற்றும் தங்களது நிதி சார்ந்த இலக்குகளை அடைய முடியும் என உதவி செய்பவர்கள். நிதி ஆலோசகர்கள் நன்கு படித்தவர்களாகவும் மற்றும் அவர்களது துறையில் அனுபவம் மிக்கவர்களாகவும் திகழ்கிறார்கள். தங்களது நிதி ஆலோசனைகள் மூலம் ஒரு கட்டணத்தையும் பெறுகிறார்கள் இவர்கள் தனி நபர்களால் பெரிதும் விரும்பப்படுகிறார்கள்.

காப்பீடு எங்கு பொருந்துகிறது ?

ஒரு நிதி ஆலோசகராக உங்களிடம் பல்வேறு நிதி மேலாண்மை சார்ந்த தீர்வுகள் உங்கள் வாடிக்கையாளர்களுக்காக தயாராக இருக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறுபட்டிருக்கும்போது அவர்களுக்கு பல்வேறு விதமான நிதி உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதில் முக்கியமான கருவியாக செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தீர்வளிப்பது காப்பீடாகும். உண்மையில் காப்பீடு ஒரு மிக முக்கியமான நிதி திட்டமிடும் ஆயுதமாகும். ஒரு எதிர்பாராத சூழ்நிலை அமையும்போது நிதி சார்ந்த பாதுகாப்பையே அனைவரும் விரும்புவர். இத்தகைய ஒரு நிதி சார்ந்த பாதுகாப்பை காப்பீடு திட்டங்கள் அளிக்கின்றன. எதிர்பாரா சூழ்நிலைகளில் நிதி சார்ந்த இழப்புகள் நேரும்போது காப்பீடு திட்டங்கள் அதற்கான இழப்பீடுகளை வழங்குகின்றன. எனவேதான் மற்ற முதலீடு திட்டங்களால் நிறைவேற்றப்படாத நிதி சார்ந்த பாதுகாப்பை வழங்கும் பல்வேறு காப்பீடு திட்டங்களை உங்களது வாடிக்கையாளர்களுக்காக நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

விற்பனை பிரதிநிதியாகி காப்பீடு திட்டங்களை விற்பனை செய்யுங்கள்

காப்பீடு உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமானதும், சம்பந்தமானதுமாக இருப்பதால் நீங்கள் விற்பனை பிரதிநிதியாகி காப்பீடு விற்பனை செய்யலாம். மிண்ட்ரோவின் விற்பனை பிரதிநிதியாகி உங்களால் பல்வேறு உயிர் மற்றும் பொது காப்பீடு நிறுவங்களின் காப்பீடு திட்டங்களை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்பனை செய்ய முடியும். 20க்கும் மேற்பட்ட காப்பீடு நிறுவங்களின் பிரதிநிதியாக நீங்கள் செயல்படுவீர்கள். காப்புறுதி திட்டங்கள் உங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும், அதேசமயம் நீங்கள் விற்பனை செய்யும் காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு கூடுதல் தரகு (கமிஷன் ) வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. மேலும் நீங்கள் எளிதில் காப்பீடு விற்பதற்கு ஏதுவாக Turtlemint உங்களுக்கு ஒரு முழுமையான பிற்கட்ட உதவி புரிகிறது.

விற்பனை பிரதிநிதியாகி காப்பீடு திட்டங்களை எவ்வாறு விற்பது ?

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி விற்பனை பிரதிநிதியாக முடியும்


  • மிண்ட்ப்ரோவுடன் ஆன்லைன் பதிவு செய்து கொள்ளுங்கள்
  • உங்கள் KYC ஆவணங்களை சமர்ப்பித்து உங்களுடைய பதிவு நடவடிக்கையை நிறைவேற்றுங்கள்
  • உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் மூலமாக ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளுங்கள்
  • விற்பனை பிரதிநிதி தேர்வெழுதி அதில் வெற்றி பெறுங்கள்
  • தேர்வில் வெற்றி பெற்று விற்பனை பிரதிநிதி உரிமம் பெறுங்கள்

விற்பனை பிரதிநிதியான பின்னர் நீங்கள் பல்வேறு காப்பீடு நிறுவனங்களின் காப்புறுதி திட்டங்களை விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்றவர்களாகிறீர்கள். எனவே


  • வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆய்ந்து அவர்களுக்கு தேவையான காப்பீடு திட்டங்களை கண்டறியுங்கள் .
  • அவர்கள் தேவைகளுடன் பொருந்துகின்ற காப்பீடு திட்டங்களை விற்பனை செய்யுங்கள்
  • விற்பனை செய்த காப்புறுதியில் தரகு பெறுவதோடு மேலும்

மிண்ட்ப்ரோவின் ஆன்லைன் செயலி நீங்கள் காப்பீடு திட்டங்களை எளிதில் விற்பனை செய்ய உதவும் ஒரு கருவியாகும். காப்பீடு விற்பனை, அவற்றை ஒப்பிடுதல், உங்கள் வியாபாரத்தை கண்காணித்தல், உங்கள் வாடிக்கையாளர்களின் பட்டியலை மேலாண்மை செய்தல் போன்ற பல்வேறு விஷயங்களை ஒரே செயலியில் உள்ளடக்கி தருவதே மிண்ட்பரோ செயலியாகும். நீங்கள் மிண்ட்ப்ரோவின் விற்பனை பிரதிநிதியானவுடன் உங்கள் காப்பீடு விற்பனையை இந்த செயலியின் மூலம் எளிதாக்க முடியும்.

எனவே ஒரு நிதி ஆலோசகராக காப்பீடு திட்டங்களை உங்கள் பொருட்கள் பட்டியலில் சேர்த்து உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான நிதி தீர்வை வழங்குங்கள். உங்களுக்கும் இரு வருமானம் காத்திருக்கிறது

Know about காப்பீடு விற்பதின் மூலம் எவ்வளவு பணம் சமபாதிக்க முடியும் ?