காப்பீடு முகவர் தேர்வு பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்


Join us
/ காப்பீடு முகவர் தேர்வு பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

காப்பீடு முகவர் பரீட்சை

காப்பீடு முகவராக இருப்பது ஒரு கவர்ச்சிகரமான தொழில் வாய்ப்பாகும். நீங்கள் விற்பனை செய்யும் திட்டங்கள் மூலம் உங்களால் கணக்கிலடங்காத தரகு (கமிஷன்) தொகை மற்றும் உங்கள் விருப்பப்படி பணியாற்ற முடியும். ஆனால் முகவராக ஆவதற்கு நீங்கள் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். காப்பீடு முகவர் பரீட்சை IRDAI-வால் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் அதில் தேர்ச்சி பெறுவோர் முகவர்களாக பணியாற்றும் உரிமம் பெற முடியும். இந்த தேர்வின் விவரங்களை பார்ப்போம்.

காப்பீடு தேர்விற்கு தேவையான தகுதிகள்

முகவராக விண்ணப்பிக்க மற்றும் தேர்வு எழுத சில தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அந்த தகுதிகள் பெற்றிருந்தால் மட்டுமே நீங்கள் காப்பீடு முகவர் தேர்வை எழுதி உரிமம் வாங்க முடியும். அதற்கான அடிப்படை தகுதிகள்.


  • குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
  • கிராமபுறங்களில் வசிப்பவராக இருந்தால் 10ம் வகுப்பும் , நகர்ப்புறங்களில் வசிப்பவராக இருந்தால் 12 ம் வகுப்பும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்
  • ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காப்புறுதி நிறுவனத்தில் முகவராக பதிவு செய்திருத்தல் வேண்டும்
  • IRDAI நிர்ணயம் செய்த பயிற்சி மேற்கொண்டு முகவர் தேர்வு எழுத தகுதி பெற்றிருத்தல் வேண்டும்

தேர்வின் அமைப்பு

காப்பீடு முகவர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். 100 மதிப்பெண்களுக்கான பல்வேறு தேர்வுகளை கொண்ட வினாக்கள் கொண்டிருக்கும். காப்பீடு முகவர் தேர்வில் தேர்ச்சி பெற மற்றும் முகவர் உரிமம் பெற நீங்கள் குறைந்த பட்சமாக 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

காப்பீடு தேர்வுக்கான ஆயத்தங்கள்

காப்பீடு தேர்வுக்கான ஆயத்தங்கள் மிகவும் எளிமையானவை. இது IRDAI-யால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு சான்றிதழ் படிப்பாகும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் உங்களுக்கு தேர்வுக்கான பாடத்திட்டத்தில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. காப்பீடின் அடிப்படையும் மற்றும் அதன் கோட்பாடுகளையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். IRDAI -வால் நிர்ணயிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு பின்வருவனவை கற்பிக்கப்படும்


  • காப்பீட்டின் கோட்பாடுகள் அதன் தேவைகளும் நோக்கமும்
  • காப்பீடுடன் சம்பந்தப்பட்ட மொழிகள் உதாரணத்திற்கு இடையூறு, பேரிடர், இன்னல்
  • காப்பீடு சந்தை மற்றும் அதன் சேனல்கள்
  • காப்பீட்டின் கொள்கைகள்
  • எப்படி விற்பது மற்றும் பல

உங்கள் பயிற்சியை நீங்கள் முறையாக எடுத்து, காப்பீடின் கோட்பாடுகளை புரிந்து கொண்டால் காப்பீடு முகவர் பரீட்சையை உங்களால் எளிதில் தேர்ச்சி பெற முடியும். உங்களால் மாதிரி வினாக்களை இங்கே காண முடியும்.

முகவர் தேர்வின் முக்கியத்துவம்

அனைத்து முகவர்களும் காப்பீடு விற்பனைக்கு முன் சான்றிதழ் பெறுவது IRDAI-வால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் முகவர் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மட்டுமே பெற முடியும்.

தேர்ந்த, விவரமறிந்த தனி நபர்கள் மூலம் மட்டுமே காப்பீடு விற்பனை செய்ய வேண்டும் என்பதே இதன் முக்கிய காரணம் ஆகும்.

காப்பீடு ஒரு தொழில் நுட்பம் சார்ந்த கோட்பாடு என்பதால் அதை முறையாக பயிற்சி எடுத்தால் மட்டுமே அதை பற்றிய விவரங்கள் அறிய முடியும்.

முகவர்களின் அறிவை சோதிக்கும் விதமாக அமைவதுதான் காப்பீடு முகவர்களுக்கான தேர்வாகும். முகவர் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே தங்களது உரிமத்தை பெற முடியும்.

உரிமம் பெற்ற முகவர்கள் சரியான ஒரு காப்பீடு திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அவர்களது இந்த பயிற்சி முறை உதவுகிறது.

மிண்ட்ப்ரோ வழங்கும் தீர்வுகள்

மிண்ட்ப்ரோ IRDAI-வால் உருவாக்கப்பட்ட ஒரு எளிமையான காப்பீடு தேர்வை உங்களுக்கு வழங்குகிறது. IRDAI-யின் வழிகாட்டுதல் படி நடக்கும் இந்த தேர்வு 100 மதிப்பெண்களுக்கானது. இது ஒரு சுலபமான தேர்வாகும். இதில் நீங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி ஆகலாம்.

உங்கள் அறிவு திறன் மேம்பட உங்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். இந்த பாடத்திட்டம் IRDAI-வால் உருவாக்கப்பட்டது. மேலும் எளிதில் புரிந்து கொள்ள எதுவாக ஆன்லைன் காணொளி மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த காணொளிகளை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் காணலாம். நீங்கள் வகுப்பறைக்கு செல்ல தேவை இல்லை.

நீங்கள் மிண்ட்ப்ரோவைத் தேர்ந்தெடுத்து ஒரு எளிமையான தேர்வின் மூலம் விற்பனை பிரதிநிதி ஆகலாம். ஒரு விற்பனை பிரதிநிதியாக உங்களால் பல்வேறு நிறுவனங்களின் காப்பீடு திட்டங்களை விற்பதன் மூலம் கவர்ச்சிகரமான வருமானம் பெறலாம்.

காப்பீடு விற்பதன் மூலம் எவ்வளவு வருமானம் பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.